RSS

வரலாறும் தேசியமும்

ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக்
கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமது
வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோ
அவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப்
படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுக
ளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது.
வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதி
வரலாறு, அரசியல், புவியியல், சமூகவியல், இலக்கியம்
என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. ஒரு இனத்தின் நாகரிகம்,
பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு இவையனைத்தும்
உதவுகின்றன. தன்னினத்தின் தொண்மையும், தொல்காலசசுவடுகளையும் ஒரு தேசிய இனம் உய்துணரும்போது
விடுதலை வேட்கையும் நாட்டுப்பற்றும் மேன்மை
அடைகின்றன. பிற இனங்களின் பண்பாட்டு இயல்புகள்,
வரலாற்றுப் போக்கு, அரசு முறை என்பவற்றையும் நாம்
கற்றுணர வேண்டும். நமது அயல்நாடுகள் எம்மீது பாதிப்புக்
களை ஏற்படுத்து கின்றன.

அவர்கள் மேற்கொள்ளும்
இராசதந்திர மற்றும் அரசியல் அணுகுமுறைகளை
விளங்கிக்கொள்வதற்கு அந்த நாடுகளின் வரலாறும்
பாரம்பரியமும் எமக்கு உதவுகின்றன. இவ்வகையான
வரலாற்றுக் கற்கை எமது வெளியுறவைப் பலப்படுத்துவ
தோடு எமது தற்காப்புக் கவசமாகவும் இடம்பெறுகிறது.
தொடர்ச்சியாக எழுதப்பட்ட வரலாறு ஈழத்தமிழர்
களுக்கு இல்லாமை தேசிய உணர்வை ஓரளவுக்குப்
பாதிக்கின்றது. தமிழ்மொழி பழமை மிக்கதாகவும், தனி
மரபுகொண்டதாகவும், தானே முகிழ்த்ததாகவும், மற்றைய
மொழிகளிலிருந்து கிளைக்காததாகவும், தன்னகத்தே
பெருவளமிக்க தொன்மையான இலக்கியமுள்ளதாகவும்
இருப்பதால் எமது தேசியமும் தமிழுணர்வும் குன்றாதிருக்
கின்றன. இருப்பினும் தமிழகத்திலோ இங்கோ தொடர்ச்
சியான வரலாற்று நூல்கள் இல்லாக்குறையை நிவர்த்தி
செய்ய முடியாதிருக்கின்றது. சிங்கள மக்களைப்
பொறுத்தளவில் புனைகளுடனாவது ஒரு எழுதப்பட்ட
வரலாறு மகாவம்ச உருவத்தில் இருக்கிறது.

தமிழ் என்று
முதன் முதலாக சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்
திலும் குறிப்பிடப்படுகிறது. தமிழ் என்ற சொல் இவற்றில்
ஒரு மொழி, ஒரு இனம், ஒரு நாடு என்பவற்றைக் குறிப்
பிடும் பதமாகப் பயன்படுகின்றது. பொதுவாக மொழியைக்
குறிக்கும் சொல், அம்மொழி பேசும் மக்கள், மொழி
வழங்கும் நாடு என்பனவற்றைக் குறிக்கும். இது தமிழ்
மொழிக்கும் பொருந்தும், ஆனால் தமிழ் மேலும் விரிவான
பல பொருள்களைக் கொண்டுள்ளது. ''இனிமையும்
நீர்மையும் தமிழ் எனலாகும்'' என்று பிங்கல நிகண்டு
கூறுகிறது. சேரன் செங்குட்டுவனின் வடபுலச் செலவு
பற்றிக் குறிப்பிடும் இளங்கோவடிகள் தமிழ் என்பது
வீரத்தைக் குறிப்பிடவைத்துள்ளார்.

''வடதிசை மருங்கின் மன்னவரெல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென''
சிலப்பதிகாரம் 26:185

தமிழ் என்பது தமிழ் நூலையும் குறிப்பிடும்
என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள்.
தமிழீழத்தவரான தவத்திரு தனிநாயகம் அடிகளார்
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்களிற்குச்
சென்று தமிழின் பெருமை பற்றிப் பேசியுள்ளார். தமிழின்
தொன்மை, இலக்கியவளம் என்பன பற்றி அவர் பல்வேறு
பல்கலைக்கழகங்களின் மேலாளர்களுக்கு எடுத்துக் கூறினார்.
தமிழைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்
என அவர் வேண்டுகை விடுத்தார். சமஸ்கிருதம் போன்ற உயர்
நிலை தமிழுக்கு இல்லையென்று சில பல்கலைக்கழகங்கள்
அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இருப்பினும்
இங்கிலாந்து, ருசியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள்
தமது சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையைத்
தொடங்கின. ஆனால் இந்திய மொழிகள் என்ற தலைப்பின்
கீழ் மாத்திரம் அவை கற்பித்தலைத் தொடங்கின. தமிழைத்
தனியாக வளர்க்க அவர்கள் முன்வரவில்லை. இப்போது தமிழ்
பற்றிய புதிய விழிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அறிவுசார் மானிடத்
தின் பொது மூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான்
இருத்தல் வேண்டும் என்ற கருதுகோளின்படி தமிழார்வம்
முகிழ்த்துள்ளது. எமது விடுதலைப்போரும் தமிழார்வத்திற்கு
இன்னுமோர் காரணமாகலாம்.

சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் வேத நூலான
மகாவம்சத்தின் முன்னணிக் கதாநாயகனாகத் துட்டகாமினி
நிறுத்தப்பட்டுள்ளான். மகாநாம என்ற புத்தபிக்கு எழுதிய இன்
நூலில் தமிழர்களின் படுகொலை நியாப்படுத்தப்பட்டுள்ளது.
இது இன முரண்பாட்டிற்கு அடித்தளம் அமைத்ததோடு ஒரு
வரலாற்றுப் புரட்டையும் உருவாக்கியுள்ளது. பல நூற்றாண்டு
களுக்கு முன் எழுதப்பட்ட மகாவம்சத்தின் சுவடிகள் நெடுங்
காலமாகக் காணாமற் போயிருந்தன. 1826 ஜோர்ஜ் ரேனர்பு நு(GEORGE TURNER) என்ற பிரிட்டி~; நிர்வாக அதிகாரி
அம்பாந்தோட்டைப் பகுதியில் உள்ள முல்க்கிரிகல புத்த
விகாரையில் பாதுகாக்கப்பட்ட ஓலைச் சுவடிகளைக் கண்டு
பிடித்தார். 200அ உயரமான குன்றின் மேலுள்ள இந்த விகாரை
சிறிலங்காவின் மிகப் பழமை வாய்ந்தவற்றில் ஒன்றாகும்.
பாளிமொழியில் இருந்த மகாவம்சத்தை மொழிபெயர்ப்புச் செய்த
வில்கெல்ம் கைகர் (WILHELM GEIGER) அதுபற்றி
பின்வருமாறு கூறுகின்றார்.

''இலங்கை வரலாற்றை ஆராயும்
போது என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட என்ன
சொல்லப்படவில்லை என்பதை ஆராய்வதே மிகச் சிரமமான
காரியமாக உள்ளது''

இலங்கை வரலாறு பற்றிய ஆய்வுகளை
மேற்கொள்வோர் இரு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்
கின்றனர். மகாவம்சம் போன்ற நூல்களில் இருக்கக்கூடிய
உண்மைகளைப் பகுத்தறிவது. இந்த நூல்களில் மறைக்கப்
பட்டவற்றை வெளிக்கொணர்வது. இந்த இரண்டையும்
செய்வதில் ஆய்வாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் ஏராளம்.
அத்தோடு வரலாற்றுச் சான்றுகள் திட்டமிட்டு அழிக்கப்படு
கின்றன. புதிய சான்றுகள் உருவாக்கப்படுகின்றன.
தான் போரில் கொன்ற எல்லாளனின் சமாதிக்கு
அருகிலுள்ள பாதையில் செல்வோர் கால் நடையாகச் செல்ல
வேண்டும் என்று துட்டகாமினி கட்டளையிட்டதாக மகாவம்சம்
கூறுகின்றது. பிரிட்டி~hர் காலத்தில் சிவிகை போன்றவற்றிலசெல்லும் பயணிகள்கூட இறங்கி நடந்து சென்றதாக
ஆங்கிலேயர்களின் நூல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால்
1948இற்குப் பின் எல்லாளனின் சமாதி இருந்த இடம் தெரியாமல்
மறைந்துவிட்டது. சமாதியை அடையாளமிடும் கற்கட்டிடம்
அகற்றப்பட்டுள்ளது. எல்லாளன் சமாதி எங்கே என்று கேட்டால்
அதைக் காட்ட முடிவதில்லை. தமிழ் - சிங்கள உறவுகளை
இன்றுவரை தீர்மானிக்கும் எல்லாளன் - துட்டகாமினி போரானது
மகாவம்சம் எழுதப்படுவதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு
முன்பாக நடைபெற்றது. ஒரு ஆட்சியைப் பிடிக்கும் போரை
இனப்போராக மாற்றியவர் பிக்கு மகாநாமதேரர். சமஸ்கிருத
இதிகாச நூல்களின் பாணியில் இவர் காவியமுறையில் இப்
போரைச் சித்தரித்துள்ளார். தனது காலத்துப் போர்முறைகளை
முன்னைய காலத்திற்கு உரியதாக வடித்துள்ளமையானது
வரலாற்றுச் சான்றாகமாட்டாது. சிறிலங்காவின் முதலாவது
தொல்லியல் ஆணையாளராகப் பதவிவகித்த டாக்டர் செனரத்
பறண விதானவும் (ARCHAEOLOGICAL COMMISSIONER,
DR.SENERATH PARANAVITHNA)இதே தவறைச்
செய்துள்ளார். அதாவது இப்போர் தமிழ் - சிங்கள இனப்போர்
என்பது இவருடைய நிலைப்பாடு.
இலங்கையில் ஆங்கிலேயர் அல்லாத முதலாவது
தொல்லியல் ஆணையர் பறணவிதான மகாநாம தேரருக்கு
நிகரான பௌத்த - சிங்களப் பேரினவாதியாக இடம்பெறு
கின்றார். அவர் வெளியிட்ட நச்சுக்கருத்துக்கள் சிங்கள வெறி
யையும் தமிழர் விடுதலைத் தீவிரத்தையும் தூண்டுகின்றன.
1940 தொடக்கம் 1956 வரை அவர் இப்பதவியில் இருந்த
காலத்தில் உடைந்த பௌத்த சின்னங்களைத் தமிழர்களின்
பாரம்பரிய பூமியில் புதைத்துவைத்தார். சிறிது காலத்தின் பின்தானே அவற்றை வெளிக்கொணர்வதில் ஈடுபட்டார். இக்
கயமையைத் தமிழர்கள் உணராதது மாத்திரமல்ல அவருடைய
கண்டுபிடிப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். தமிழர் பூமியில்
நிலவிய மாபெரும் கடலோரச் சந்தையான மாந்தை அல்லது
மாதோட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் கிடைத்த தமிழர்
களின் வர்த்தக மற்றும் அரசியல் சிறப்பை உணர்த்தும் எச்சங்
களைப் பறணவிதான தனது பதவிக்காலத்தில் மறைத்துவிட்டார்
என்று குற்றம் சுமத்தப்படுகிறது. 1956இல் இளைப்பாறிய பின்
பறணவிதான பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
ஒரு ஆதாரபூர்வமான இலங்கை வரலாறு எழுதும் பொறுப்பு
அவருக்கு வழங்கப்பட்டது. அவர் மகாவம்சத் தகவல்களை
வரலாறாக உறுதிப்படுத்துவதில் தீவிரமாக இறங்கினார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இலங்கை வரலாறு (UNIVERSITY
OF CEYLON: HISTORY OF CEYLON)என்ற
நூலின் ஆரியக் குடியேற்றங்கள், சிங்களவர்கள் (THE,
ARYAN SETTLEMENTS: THE SINHALESE)என்ற
அத்தியாயத்தில் மகாவம்சக் கூற்றை உறுதிசெய்துள்ளார்.


விஜயன் தலைமையில் இலங்கைக்கு வந்த ஆரியர்
கள் இலங்கையின் மூத்த குடிகள் என்ற உண்மைக்குப் புறம்
பான செய்தியை மகாவம்சம் கூறுகின்றது. விஜயன் என்ற
ஒருவன் இருந்தானா, இங்கு வந்தானா என்பது வாதத்திற்கு
உரிய விடயம். பறணவிதான இதுபற்றிக் கவலைப்படாமல்
ஆரியக்குடியேற்றத்திற்கு இலங்கைப் பல்கலைக்கழகத்தின்
அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். ஆரிக்குடியேற்றம் என்பது
சிங்களவர் மனதில் மிக ஆழமாகப் பதிவதற்குப் பல்கலைக்
கழகம் வெளியிட்ட வரலாற்று நூல் சான்றாகியுள்ளது.பறணவிதான அவ்வளவோடு நிறுத்தவில்லை. துட்ட
காமினியின் வெற்றி (THE TRIUMPH OF
DUTHAGAMANI)என்ற அத்தியாயத்தில் (UNIVERSITY
OF CEYLON: HISTORY OF CEYLON.
VOL.1.1.PP 144 - 163)அவர், தமிழர்கள் துட்ட
காமினியின் படைகளால் பெரும் எண்ணிக்கையில்
கொல்லப்பட்டதையும் தமிழர் ஆதிக்கம் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டதையும் விரிவாக விளக்கியுள்ளார்.
புறச்சான்றுகள் அற்ற சம்பவங்களுக்கு ஒரு பல்
கலைக்கழகம் தனது அங்கீகாரத்தை வழங்குவதை
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில்
கந்தரோடையில் சேர்.போல்பீரிஸ் (SIR. PAULE
PIERIS)வெளிக்கொணர்ந்த பௌத்த சின்னங்களை
தமிழ் பௌத்தத்தின் எச்சங்கள் என்று பறணவிதான
ஏற்றுள்ளார். இதை மாத்திரம் சிங்களப் பௌத்த பேரின
வாதிகள் ஏற்க மறுத்துள்ளனர். தனது இறுதிக்
காலத்தில் பறணவிதான மனநோயால் பாதிக்கப்
பட்டார். மனநோயின் பாதிப்பில் அவர் கந்தரோடை
எச்சங்களைத் தமிழர்களுக்குரியவை என்று கூறிவிட்ட
தாகப் பேரினவாதிகள் விளக்கம் தருகிறார்கள்.
அது எந்த நாடாகவோ இனமாகவோ இருக்
கட்டும் ''தற்கால அரசியலுடன் கடந்த கால வரலாறு
பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது'' என்ற
கோட்பாடு அரசறிவியல் விஞ்ஞானிகளால் ஏற்கப்படு
கிறது. இதை அவர்கள்,HISTORY IS INE
XTRICABLY BOUND WITH CONTEMPORARY
POLITICS)என்று அறுதியிட்டுள்ளனர்.

எமது தேசிய
எழுச்சி கூர்மை அடைந்துள்ள இக்காலகட்டத்தில் நாம்
வரலாற்றுச் சான்றுகளின் சேகரிப்புக்களிலும் சேமிப்பி
லும் அவை பற்றிய குறிப்புக்கள் கால அளவீடுகள்
செய்வதிலும் தீவிர கவனம் செலுத்தவேண்டும். இது
ஓரளவு நடைமுறையில் உள்ளது பற்றி அவதானிக்கக்
கூடியதாகவும் இருக்கிறது. வரலாறு இல்லாத இனம்
என்ற மனிதகுலம் கிடையாது. முயற்சி செய்யாத
மனிதகுலம் தான் உண்டு. ஆணைக்கோட்டை ஆய்வு
களை மேற்கொண்ட பேராசிரியர் ரகுபதி, பூநகரி
ஆய்வுகள் மேற்கொண்ட பேராசிரியர் பரமு புஸ்பரத்
தினம் ஆகியோர் போற்றுதற்குரியவர்கள். அக்கராயன்
ஆய்வுகள் மேற்கொள்ளும் திரு.குணரத்தினத்தையும்
நாம் விதந்து பாராட்டுகின்றோம். நாம் தன்னாட்சி
பெற்றதும் செய்யவேண்டிய முதற்பணி வரலாற்றுச் சான்றாதாரத்
தேடலும், அவை பற்றிய ஆதாரபூர்வமான எழுத்துக்களுமாகும்.
வரலாறு தேசியத்தை உரமூட்டுவதோடு எழுச்சியுறச் செய்கிறது.
தேசியம் என்பது 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய
பிரமாண்டமான மக்கள் சக்தி. தேசியம் என்பது மக்களின் மண்,
மொழி, இனம், தேசிய கட்டமைப்புக்கள், பழக்கவழக்கங்கள்,
உணவுப் பாரம்பரியங்கள், கலைகள், இலக்கியம் போன்ற
இன்னோரன்ன துறைகள் மீதான பற்றும், பாசமும், வாஞ்சையு
மாக இடம்பெறுகிறது. இவற்றை அழியாது காத்த இனம்
காலத்தைவென்று நிற்கிறது.

கி.பி70 - கி.பி 1948 வரை தமக்
கென நாடில்லாமல் உலகெலாம் அலைந்த யூத இனம் மேற்
கூறியவற்றைப் பாதுகாத்தபடியால் இன்றும் யூத இனமாக வாழ்
கின்றது. கோ~ர் (KOSHER) என்ற யூத உணவுக் கட்டுப்
பாட்டை மிகவும் இறுக்கமாக அவர்கள் கடைப்பிடித்தார்கள்.
என்னுடையதென்று பெருமிதத்தோடு கூறுவதற்குச் சொந்த மண்
இல்லாத காலத்திலும் அவர்கள் இந்த அம்சத்தில் கவனமாக
இருந்தார்கள். யூதர்கள் கல்விக்கும் நிதி முகாமைத்துவச்
செயற்பாடுகளுக்கும் வர்த்தகத்திற்கும் கொடுத்த முன்னுரிமை
அளப்பெரியது. இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட முன்பே
பாரன்றோத் ~Pல்ற் (VARON ROTHSCHILD)போன்ற யூதர்கள்
வழங்கிய நிதியுதவியில் கொள்வனவு செய்த பாலஸ்தீன மண்
ணில் யூதர்கள் குடியேறத் தொடங்கிவிட்டார்கள் றோத்~Pல்ற்
குடும்பம் ஜேர்மனியில் கிட்டத்தட்ட அடிமை வாழ்வு நடத்திய
யூதர்கள். இவர்கள் சில்லறை வியாபாரத்தில் ஆரம்பித்து அரசு
களுக்கும் அரசர்களுக்கும் கடன்வழங்கும் தனியார் வைப்பகச்
சொந்தக்காரர்களாக வளர்ச்சியடைந்தனர். இக்குடும்பத்தின்
வைப்பகக் கிளைகள் ஜேர்மனியைவிட இங்கிலாந்து,பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்றவற்றில் காணப்படு
கின்றன. கல்வியும் நிதிமுகாமைத்துவவும் யூதர்களுக்கு இரு
கண்கள் போன்றுள்ளன. இவை யூதர்களின் தேசிய
அடையாளங்கள்.

பாலஸ்தீனத்தில் சிறிய குடியேற்றங்களைத் தனியார்
நிதியுதவியுடன் ஆரம்பித்த யூதர்கள் வேகமாகக் கல்வி
நிலையங்களை ஆரம்பித்தனர். 1925இல் உலகப் பிரசித்தமான
ஈபுரூ பல்கலைக்கழகத்தை (HEBREW UNIVERSITY)
பேராசிரியர் ஜுடோ மைக்கனஸ் (1827 - 1948) தலைமையில்
ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அதன் விவசாய ஆராய்ச்சிப் பிரிவு
பாலைநிலத்தைப் பசுமையாக்கும் திட்டத்தை நடாத்தியது.
பின்பு மொழியியல், தொல்லியல், வராற்றியல் ஆகியவற்றில்
அது ஆராய்ச்சிகளைத் தொடங்கியது. அமெரிக்காவில் யூதப்
பெண்கள் ஆரம்பித்த ஹடசா மருத்துவ நிலையத்தோடு ஈபுரூ
பல்கலைக்கழகம் இணைப்பை மேற்கொண்டது. HADASSA
மெடிக்கல் நிலையம் உலகின் தலைசிறந்த ஆராய்ச்சிப்
பிரிவைக் கொண்டுள்ளது. யூத தேசியத்தோடு தொடர்புடைய
இன்னுமோர் சொல்லான டயஸ் போறா (DIASPORA)ஒரு
கிரேக்கமொழிச் சொல். நாலாபக்கமும் விசிறப்பட்ட விதை
தானியம் என்பது இதன் நேரடிப்பொருள். ஆனால் நாளடைவில்
சிதறுண்டு நாடு நாடாக அலையும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

ஸ்ற்றாபோ (STRABO BC 64 -
AD 19) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் யூதர்கள் இல்லாத
நாடே கிடையாது என்று எழுதியுள்ளார். இன்றைய டயஸ்
போறாக்களுக்கும் ஆரம்பகால யூத டயஸ்போறாக்களுக்கும்
இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. அன்று
தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகக்
குறைவு. இதனால் வாழும் இடைச்சூழலோடு கரைந்துபோகும்
ஆபத்து நிறையவுண்டு. யூதர்களுக்குத் தாயகம் (HOMELAND)
இருக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் கரைந்து
போகாமல் இருந்ததற்கு அவர்களுடைய தேசியப் பற்று
காரணமாக அமைந்தது என்கிறார் பேராசிரியர் சொலைமன்
கிறேற்செல் (A HISTORY OF THE JEWS: PROF SOLOMON
GRAYZEL: THE JEWISH PUBLICATION SOCIETY OF
AND ERICA 1968).


இப்போது ஈரான் நாட்டிற்கு நெருக்கடி மிகுந்த காலம்.
அணு உலைகளை மூடிவிடும்படி மேற்கு நாடுகள் அதை
நிர்ப்பந்திக்கின்றன. அணு உலைகளை மின்சாரத் தேவைக்கு
இயக்கும் சாட்டில் அது அணுகுண்டைத் தயாரித்துவிடக்கூடும்
என்ற அச்சம் மேற்கு நாடுகளுக்கு உண்டு. இந்தியாவும் பாகிஸ்
தானும் திருட்டுத்தனமாக அணுவாயுதம் தயாரித்துள்ளன.
அவை அமெரிக்காவின் நட்புநாடுகள். அதனால் பரவாயில்லை.
ஐ.நா பாதுகாப்புச் சபை ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை
விதிக்க உத்தேசித்துள்ளது. ஐ.நாவின் அனுமதியின்றி ஈராக்
மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல ஈரான் மீதும் தாக்குதல்
நடத்தப்படலாம் என்று அஞ்சப்படுகின்றது. இறைமை, தேசியம்,
வரலாற்றுச் சிறப்புப் போன்ற எண்ணங்கள் ஈரான் மக்கள்
மத்தியில் தோன்றியுள்ளது. தமது நெடிய வரலாற்றுப் பாரம்
பரியத்தை அவர்கள் மீட்டுப்பார்க்கத் தொடங்கியுள்ளனர். 2500
வருடங்களுக்கு முன் பாரசீக சாம்ராச்சியம் (ஈரானின் பழைய
பெயர் பாரசீகம்) இன்றைய லிபியாவில் இருந்து சீனா வரை
நீண்டிருந்தது. துருக்கியும் வடக்கு இந்தியாவும் அதில் அடங்கும்
கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் பாரசீகம் மீண்டும் வலுப்
பெற்றது. சாம்ராச்சிய விரிவு ஆரம்பித்தது. துருக்கியிலிருந்து
இன்றைய வங்காளாதேசம் வரையும் மத்திய ஆசியா
உள்ளடங்கலாகப் பாரசீக சாம்ராய்ச்சியம் பரந்துகிடந்தது. இது
வரலாறு. ஆனால் நவீன ஈரானுக்கு தனது பழைய வரலாறு
மிகவும் முக்கியம். ஈரானின் பாரம்பரியம், கலாசாராம் கிறிஸ்தவ
மதத்திற்கு அது வழங்கிய அடிப்படைக் கோட்பாடுகள் என்பன
பற்றிய மதிப்பீடுகள் இப்போது செய்யப்படுகின்றன. வரலாறு
வேராகவும் அதன் வளர்ச்சிப்போக்கு விருட்சமாகவும் பார்க்கப்
படுவது வழமை. சுவர்க்கம், நரகம் (HEAVEN. HELL)என்ற
கிறிஸ்தவ வெளிப்பாடுகள் புராதன ஈரானில் தோன்றியவை.
யூத மதத்திற்கு முக்கியமான புனித தல்முட் (HOLY
PALMUD)நூலில் ஈரானிய மொழிச் சொற்களும் கருத்துக்
களும் காணப்படுகின்றன.

வரலாறு ஏட்டுச்சுரக்காய் அல்ல, அது
வாழும், வாழவைக்கும் ரகம்.
தேசிய எழுச்சிக்கு வரலாற்று நினைவுகள் (HISTORICAL
MEMORIES) முக்கிய காரணமாக அமைகிறது.
தமது இனவரலாற்றின் உன்னதமான பகுதிகளை நினைவு
கூறுவதும் அதுபற்றிப் பேசுவதும் எழுதுவதும் மனித இயல்பு.இதனால் தேசிய உணர்வு பலம்பெறுகின்றது. 21ஆம்
நூற்றாண்டில் இஸ்லாம் - கிறிஸ்தவ மதங்களுக்கு இடை
யிலான முறுகல் மோசமடையலாம் என்று எதிர்வு கூறப்படு
கின்றது. இஸ்லாம் மதத்தினருக்கு ஒரு அதி உன்னதமான
காலம் இருந்தது. பின்பு அவர்கள் வீழ்ச்சி கண்டதோடு
கிறிஸ்தவ மேற்கின் கட்டுப்பாட்டிலும் வந்து விட்டார்கள்.
இப்போதைய தலைமுறையினர் கொதிப்படைந்து மேற்கின்
மேல் போர் தொடுப்பதற்குக் காரணம் இஸ்லாமின் வரலாற்றில்
இருக்கிறது. நபிகள் நாயகம் முகமது (கி.பி 570 - 632)
தோற்றுவித்த இஸ்லாம் மதத்தினர் உலக மக்கள் தொகையில்
1ஃ7 பங்கினராக இடம்பெறுகின்றனர். இஸ்லாம் ஒரு மதம்
மாத்திரமல்ல. ஒரு வாழ்க்கை முறையும் ஆகும். கி.பி 8ஆம்
நூற்றாண்டில் இஸ்லாம் வட ஆபிரிக்கா உள்ளடங்கலாக
இஸ்பெயின் நாடு வரையும், இந்துமாகடல் பிராந்தியம் ஊடாக
பிலிப்பைன்சின் மின்டானோத் தீவு வரையும் பரவியது. 17 -
18ஆம் நூற்றாண்டுகளில் வீழ்ச்சி ஆரம்பித்தது. இஸ்லாமிய
நாடுகளை மேற்குலகம் தமக்குள் பங்குபோட்டுக்கொண்டது.
இஸ்லாமியத் தீவிரவாதம் வளர்ச்சி காண்பதற்கு இவ் வரலாற்று
நினைவுகள் போதுமானதாக உள்ளன. மருத்துவம், வானியல்,
கணிதம், வேதியல், வரலாற்றியல் போன்றவற்றை ஐரோப்பா
விற்கு அன்றைய இஸ்லாம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


விஜயனின் வருகைக்கு முன் இலங்கையில் நாகரீக
வளர்ச்சி அடைந்த மக்கள் இருக்கவில்லை என்றும், தமிழர்கள்
காலம் பிந்திவந்த வந்தேறு குடிகள் என்றும் சிங்களவர்கள்
நம்புகின்றனர். தமிழ் சிங்கள முரண்பாடுகளுக்கு இதுதான்
அடிப்படைக் காரணம். புத்தபகவான் சிங்கள - பௌத்தர்
களுக்கு இத்தீவை வழங்கிவிட்டார் என்ற நம்பிக்கையும் முரண்
பாட்டை வளர்க்க உதவுகின்றது. சிங்கள - தமிழ் இனங்கள்
ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறு இந்த நாட்டில்
கிடையாது. தற்கால அரசியலில் இரு பகுதியும் பிரச்சினை
களைப் பேசி தீர்ப்பதுவும் .இயலாமல் இருப்பதற்குத் தகுந்த
காரணமும் உண்டு. தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அரசியல்
உரிமைகளை வழங்கக்கூடாது என்பதில் சிங்களத் தலைமைவலுவான மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஷஷசிங்கள - தமிழ் உறவுப்
பாதையில் ஒப்பந்தங்கள், உறுதிமொழிகள், பேச்சு முடிவுகள்
ஆகியவற்றின் உடைவுகள் சிந்திக்கிடக்கின்றன என்று ஒரு
பிரபல ஆய்வாளர் எழுதியுள்ளார். செங்கையாழியனின் கிழக்கும்
மேற்கும் என்ற சிறுகதையில் தமிழனைத் திருமணம் செய்த
ஜேர்மன் பெண்ணும் 6 வருடத்தின் பின் தாயகம் வரும் கனடாத்
தமிழ் இளைஞனும் யாழ் செல்வதற்காகக் கிளாலிக் கடலோரத்
தில் நிற்கிறார்கள். தனது கணவனின் பெற்றோரைப் பார்க்கச்
செல்லும் அந்தப் பெண் அந்த இளைஞனோடு உரையாடும்
போது நாங்கள் எங்கள் சுதந்திரத்தைப் போராடித்தான்
பெற்றோம். அநியாயமாக ஜேர்மனியைப் பிரித்தவர்கள் ஆதிக்
கத்தைக் கலைத்து இன்று ஒன்றுபட்டிருக்கிறோம்'' என்றாள்.
அவன், ''நீங்கள் ஒன்றுபட்டிருக்கிறீர்கள், நாங்கள் பிரிகிறதென
நிற்கிறோம்''என்று சொன்னான். அதற்கு அப்பெண் சொன்ன
பதில், ''நீங்கள் எப்போது ஒன்றாக இருந்தீர்கள் பிரிவதற்கு?''

(இரவுநேரப் பயணிகள்: சிறுகதை நூல்: வெளியீடு: 1995.)


ஈழத்தமிழர்களின் தேசிய அரசியல் 1921இல் தொடங்
கியது. இலங்கையர் என்ற அடையாளத்தை முதன்மைப்
படுத்திய பொன் அருணாசலத்தைச் சிங்களத் தலைவர்கள்
ஏமாற்றினார்கள். தமிழர்கள் ஏமாற்றப்பட்டது இதுதான் முதற்
தடவை. அருணாசலத்தின் தேசியம் உயிர்த்தெழுந்ததற்குக்
கொடுத்த வாக்குறுதியை சிங்களத் தலைமை மீறியதே
காரணம். அருணாசலம் தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும்
என்ற முடிவிற்குப் புற அழுத்தம் இன்றி வந்திருந்தால்
ஆரோக்கியமாக இருந்திருக்கும். அருணாசலத்திற்குப் பிந்திய
தமிழ் தலைவர்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டதாக வரலாறு
இல்லை. ஈழத்தமிழர் வரலாற்றில் மிகவும் கேவலமான பகுதி
யாக இதைக்கொள்ளலாம். அருணாசலத்தின் மகன் மகாதேவா
கூட விதிவிலக்காக அமையவில்லை. சிங்களவர்கள் உடனான
உறவுகளை அருணாசலம் வெட்டிக்கொண்ட பின்பும்
மகாதேவா சிங்கள அரசியல் தலைமைகளோடு நெருக்க
உறவைப் பேணினார். இன்றைய தலைமுறை ஒட்டுண்ணிகள்
எம் மாத்திரம்.


இருமொழிக்கொள்கையை மிகவும் நேர்மையாகவும்
நேர்த்தியாகவும் நிர்வாகம் செய்யும் உலகின் ஒரேயொரு நாடு
என்ற சிறப்பு கனடாவிற்கு உண்டு. ஆங்கிலம், பிரஞ்சு மொழி
பேசும் கனடாப் பிரஜைகளின் உரிமைகளைக் குறையின்றிப்
பேணும் நாடான கனடாவையும் தமிழுக்குமுரிய அந்தஸ்த்து
வழங்குவதாகக் கூறும் சிறிலங்காவையும் எவ்விதத்திலும்
ஒப்பிட்டுப் பார்க்கவியலாது. ஆனால் அண்மைக் காலமாக
கற்கை நோக்கில் ஒப்புநோக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்
படுகின்றன. ருசியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது
மிகப்பெரிய தரைப்பரப்பைக்கொண்ட கனடா சம~;டி அரசு
முறையை நடைமுறைப்படுத்துகின்றது. 10 மாகாணங்களும்
2 பிரதேசங்களும் (TERRITORIES)கொண்ட கனடாவில்
குவெபெக் மாகாணம் மொழி, இன, மத வேறுபாடுகளைக்
கொண்டதாக இடம்பெறுகின்றது. குவெபெக் மாகாண மக்கள்
கூடுதலாக பிரெஞ்சுமொழி பேசும் கத்தோலிக்க மதத்தினராகவும்
பண்பாட்டு அடிப்படையில் வேறுபட்டவர்களாகவும்
அமைந்துள்ளனர். தனிநாடாகப் பிரிந்துசெல்லவேண்டும் என்ற
இயக்கம் குவெபெக் மாகாணத்தில் உண்டு. அமைதி
முறையில் சனநாயக அடிப்டையில் பிரிந்துசெல்லும் கோரிக்
கையை முன்னெடுக்க வேண்டும் என்பதில் இறைமைக்கான
குவெபெக் அரசியல் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.

கனேடிய அரசியலில் வன்முறைக்கு இடமில்லை.
ஆனால் 1960இன் பிற்பகுதியில் பிரிவினைக்கான
வன்முறைகளும் பயங்கரவாதச் சம்பவங்களும் நடைபெற்றன
என்பதை மறுக்கமுடியாது. அவை முடிவிற்கு வந்தபின்
அரசியல் வன்முறைகள் தோன்றவில்லை. கனடா அரசு
1960களின் வன்முறைகளைப் பாராபட்சமின்றி நசுக்கியது.
இதற்குப் பிரெஞ்சுமொழி பேசும் மக்கள் பலரின் ஆதரவு
இருந்தது. 90வீதமான பிரெஞ்சுமொழி பேசுவோர் அரசியல்
வன்முறையையும் பயங்கரவாதச் செயற்பாடுகளையும் தீவிர
மாக வெறுக்கின்றனர். சனநாயக வழிமுறை என்பது வேறு
விடயம். குவெபெக்கில் 1960களில் தோன்றிய பயங்கர
வாதத்தை நசுக்குவதற்குப் போருக்கான நடவடிக்கைச்
சட்டத்தை (MEASURES ACT) கனேடியப் பிரதமர் பியரி ற்ரூடூ
(PIERRE TRUDEAU)பிரகடனப்படுத்தியதோடு இராணு
வத்தைக் குவெபெக் மாகாணத்திற்கு அனுப்பினார்.

ஒக்டோபர்
நெருக்கடி 1970) (OCTOBER CRISIS 1970)என்றழைக்கப்
படும் குவெபெக் வன்முறைகள் இவ்வாறு முடிவிற்குக் கொண்டு
வரப்பட்டன. இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது
என்னவென்றால் பிரதமர் ற்ரூடூ குவெபெக் தலைநகர் மொன்
றியலில் பிறந்த பிரெஞ்சுமொழி பேசுபவர். அவர் இரு மொழி
வல்லுனர். கனடா பிரியக்கூடாது என்பதில் தீவிரமாக
இருந்தவர். அவருடைய தந்தையொரு பிரெஞ்சுக்காரர். தாய்
ஒரு கனேடிய ஐரிஸ் பெண்மணி. ஒக்டோபர் நெருக்
கடியின்போது குவெபெக்கின் முதல்வராக ரொபெட் பூராசா
((ROBERT BOURASSA)பதவி வகித்தார். இவர் ற்ரூடூ
வன்முறைகளுக்கு எதிராக எடுத்த இராணுவ நடவடிக்கை
களுக்குப் பூரண ஆதரவு வழங்கினார்.
சிறிலங்கா வன்முறைகளையும் கனடாவின்
ஒக்டோபர் நெருக்கடிகளையும் ஒப்பிடும்போது கவனிக்கவேண்டிய இன்னுமோர் முக்கிய விடயம் இருக்கின்றது.
ஒக்டோபர் நெருக்கடியின்போது குவெபெக் தவிர்ந்த பிற
மாகாணங்களில் வாழ்ந்த பிரெஞ்சுமொழி பேசுபவர்கள்
எந்தவொரு குறையையும் அனுபவிக்கவில்லை. சிறிலங்காவில்
தமிழனென்றால் பயங்கரவாதி என்று அர்த்தம். கனடாவில்
சட்டத்தின் ஆட்சி சரிவர நடக்கிறது. பிரெஞ்சுமொழி பேசும்
குவெபெக் மாகாணத்தவர்கள் அரசியலிலும் நீதித்துறைகளிலும்
அதியுயர் பதவிவகிக்கின்றனர். அனைத்துக் கனடாவின்
பிரதமராகவும் பியரி ற்ரூடூ மாத்திரமல்ல, குவெபெக் மாகாணத்
தவரான பிரெஞ்சுக்காரர் ஜீன்ஸ் செனற்றியனும் (JEAN
CHRETIEN)1990இன் பிற்பகுதியில் பதவி வகித்துள்ளார்.
ஒக்டோபர் நெருக்கடியின்போது கனேடிய இராணுவம்
வன்முறைக் குழுக்களுக்கு எதிராக மாத்திரம் போரிட்டது.
பொதுமக்களுக்கும் அவர்களுடைய சொத்துக்களுக்கும் தீங்கு
ஏற்படவில்லை. சிறிலங்காவில் முழுக்க முழுக்கச் சிங்களவர்
களைக்கொண்ட இனவாத இராணுவம் ஒட்டுமொத்த ஈழத்
தமிழனத்திற்கும் எதிராகப் போரிடுகின்றது. இங்கு நடப்பது
இனப்போர். நாம் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போரை
நடத்துகின்துகிறோம். தமிழர் தாயகத்தைப் பொருளாதார ரீதியாக
அழிப்பதில் சிங்கள அரசு ஈடுபடுகின்றது. ஆனால் குவெபெக்
மாகாணத்தின் வளர்ச்சியில் கனடா அரசு தீவிர அக்கறை
காட்டுகின்றது.

கனடாவில் பிரிவினை ஒரு அரசியல் பொழுதுபோக்கு
என்றால் எமக்கு அது வாழ்வா சாவா என்ற ஒரு தேசியப்
போராட்டம்.

-கலாநிதி க. சோமாஸ்கந்தன்
நன்றி: http://aatputhan.blogspot.com/2008/03/blog-post_23.html
--

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: