RSS

இது ஒரு அழகான தமிழ்ப் பாடல்.

இது ஒரு அழகான தமிழ்ப் பாடல்.


பூனக்கி ஆறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால்பதினே ழானதே - மானேகேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்



பூனைக்கு ஆறுகால் என்று அவர் பாடவில்லை.

பூனக்கி ஆறுகால் என்றே பாடியுள்ளார்.

பூனக்கி = பூ+நக்கி

பூவை நக்கி தேனையும் மகரந்தத்தையும் சேர்ப்பது தேனி.
தேனிக்கு கால் ஆறுதானே.

புள்ளினத்துக்கு ஒன்பதுகால்

ஆனைக்குக் கால் பதினேழானதே...

இது பின்னப்பெருக்கல் வாய்ப்பாடு

வாய்ப்பாட்டைச்சொல்லி பார்ப்போமே.....


ஒரு கால் - கால்
இரு கால் -அரை
மூன்றுxகால் - முக்கால்
நான்கு xகால் - ஒண்ணு

ஐங்கால்-ஒண்ணேகால்
அறுகால் - ஒண்ணரை
எழுகால் - ஒண்ணேமுக்கால்
எண்கால் - ரெண்டு

ஒம்பத்திக்கால் - ரெண்டேகால்

பறக்கும் புள் - பறவை இனத்துக்கும்

ஒம்பத்திக்கால் ரெண்டேகால் - பறவைகளுக்கு இரண்டே கால்கள்தாம்
உள்ளன.

பதினாறு கால் - நாலு
பதினேழு கால் - நாலேகால்

ஆகவே ஆனைக்கு கால் நாலேகால்தான்.
நாலேதாம் அதன் கால்கள். அதற்குமேல்கிடையாது என்று ஆகிறது.

'முண்டகத்தின்மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்'

'முண்டகத்தில் முழுநீலம்' என்பது தாமரையாகிய முகத்தில்
கண்களாகிய முழுநீலம் விளங்குவதைக் குறிக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: