RSS

இணையத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீனா

சர்வதேச அளவில் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை அப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் செயல்படும் பிடிஏ (BDA) என்ற தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி, சீனாவில் 220 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்றும், இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 217 மில்லியன் மக்களே இணையதளத்தை பயன்படுத்தியதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார முன்னேற்றம், அகண்ட அலைவரிசை தொழில்நுட்பத்தில் சிறப்பான மேம்பாடு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று பிடிஏ நிறுவனத்தை சேர்ந்த லியு பின் தெரிவித்தார்.
நடப்பாண்டில் (2008) சீனாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 280 மில்லியனாக உயரும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.
கடந்த 1969ல் அமெரிக்க ராணுவ பயன்பாட்டுக்காக இணையதளம் கண்டுபிடிக்கப்பட்டது முதலே, இணைய பயன்பாட்டில் முதலிடத்தில் அமெரிக்கா இருந்து வந்ததாகவும், தற்போது அந்நிலை மாறியுள்ளதாகவும் சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: